கர்நாடகாவில் பாஜக எம்.பி வீட்டில் ஐடி ரெய்டு.. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட பின்னணியில் உள்ளவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனத்திலும், அதன் பங்குதாரரான கர்நாடக மாநில பாஜக மக்களவை உறுப்பினர் சித்தேஷ்வராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர்
சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தேவங்கிரி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினராக உள்ளார் ஜி. எம். சித்தேஷ்வரா. கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் இணை அமைச்சராக கடந்த ஆண்டு வரை இருந்த இவர் பிரதமர் மோடி உத்தரவின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 Income tax raids at Neduvasal project company's shareholder BJP MP Siddeshwara's properties in Karnataka

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சித்தேஷ்வராவின் சகோதரர் லிங்குராஜா சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்தததாக கர்நாடக லோக்அயுக்தாவால் கைது செய்யப்பட்டார். சித்தேஷ்வராவின் சகோதரர் ஜி.எம். லிங்குராஜாவின் நிறுவனமான ஜெம்
லேபாரட்டரீஸ் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதோடு மாநிலத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதகாவும் குற்றம்சாட்டப்பட்டது. கர்நாடக லோக் ஆயுக்தாவால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தில் சித்தேஷ்வரா எம்.பி.க்கும் பங்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாஜக எம்பியின் நிறுவனம் கர்நாடக மாநில அரசால் சட்டவிரோதமாக இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனம் பாஜக மக்களவை உறுப்பினருக்கு சொந்தமானது என்ற அதிர்ச்சித் தகவல் இந்த ஐடி சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. சட்ட விரோதமாக இயற்கை வளங்களை சுருட்டியதாக ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட இந்த நிறுவனம் தான் புதுக்கோட்டை மாவட்ட நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய
அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம்.

ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் நெடுவாசலில் நிலத்திற்கு அடியில் குழாய் பதித்து இயற்கை வளமான ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் இன்று வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு 31 தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தமிட்டது.

பாஜக எம்பியின் ஜெம் நிறுவனம் இதில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் கர்நாடக மாநிலம் தேவங்கிரியில் உள்ள நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது ஒரு தனியர் நிறுவனம் என்று மட்டுமே சொல்லப்பட்ட நிலையில் பாஜக பிரமுகரின் குடும்ப நிறுவனம் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இயற்கை வளமான இரும்புத் தாது ஏற்றுமதியை அளவுக்கு அதிகமாக சுறண்டி வெளிநாட்டில் விற்று காசு பார்த்த கும்பலிடம் தான் இந்த ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு நிறுவனம் இந்நிலையில் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனம் சித்ரதுர்காவில் உள்ள சித்தேஷ்வராவின் வீடு, தேவங்கிரியில் உள்ள அலுவலகம், பங்களா மற்றும் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பீமசமுத்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போன்று இவர்களின் குடும்பத்தால் நடத்தி வரும் நிறுவனங்களிலும் காலை முதல் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Officials of the Income Tax department raided residence and properties belonging to BJP MP G M Siddeshwara in Chitradurga
Please Wait while comments are loading...