70 மணிநேர ஐடி விசாரணை நல்ல அனுபவம்- அரசியலுக்கு அவசியமானது: திவாகரன் மகன் ஜெயானந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: வருமான வரித்துறையின் 70 மணிநேர விசாரணை என்பது நல்ல அனுபவமாக இருந்தது; அரசியலுக்கு இத்தகைய விசாரணைகள் தேவையானது என திவாகரன் மகன் ஜெயானந்த் தமது ஃபேஸ்புக் பதில் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் தம்பி திவாகரனின் மன்னார்குடி வீடு, கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. சென்னையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா உள்ளிட்டோரும் வருமான வரித்துறையின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

Interrogation with IT good experience, says Jeyanandh Dhivakaran

மன்னார்குடியில் 3 நாட்கள் திவாகரனின் வீடு, கல்லூரியில் விசாரணை நடைபெற்றது. சென்னையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திவாகரனிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த் தம்முடைய ஃபேஸ்புக் பதில், 70 மணிநேர வருமான வரித்துறை விசாரணை என்பது மிக நல்ல அனுபவமாக இருந்தது; இது அரசியலுக்கு அவசியமானதும் என பதிவிட்டுள்ளார்.

Interrogation with IT good experience, says Jeyanandh Dhivakaran

மேலும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதா? என பாலோயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இந்த நாட்டில் ஆதார் அட்டை கூட ஒரு ஆவணம்தான்.. நாங்கள் கல்லூரியையே நடத்துகிறோம். ஆவணங்கள் இருக்காதா? எனவும் கேள்வி கேட்டிருக்கிறார் ஜெயானந்த்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
”70 hours of interrogation with the income tax department was a good experience that is quite essential for politics.” says Divakaran Son Jeyanandh.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற