பயணிகளின் கவனத்துக்கு.. ஐஆர்டிசி இணையதளத்தில் 2 நாட்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஆர்டிசி இணையதளத்தில் தொழில்நுட்ப மாற்ற வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இன்றும் நாளையும் தளம் இயங்காது என ஐஆர்டிசி தெரிவித்துள்ளது.

ஐஆர்டிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், இணைய தளம் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் பாரத தரிசனம் என்னும் சுற்றுலா சேவையும் செய்து வருகிறது. இந்த சேவையின் மூலம் ஆன்மீகச் சுற்றுலாவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.

IRTC website will not work for two days

இந்நிலையில், ரயில்வே துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஐஆர்டிசி இணையதளத்தின் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனால், 23ஆம் தேதி மாலை 6.15 முதல், 24ஆம் தேதி மாலை 7 மணி வரை டிக்கெட் முன்பதிவு மற்றும் டிக்கட் ரத்து செய்யும் பணிகள் நடைபெறாது என ஐஆர்டிசி தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As IRTC website is under going some technical modification site won't function for two days said IRTC.
Please Wait while comments are loading...