காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி அதிகாரிகள் சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காளீஸ்வரி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் 2-ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250-க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று காலை முதல் வருமான வரி சோதனை நடத்தி வருகிறார்கள்.

IT officials are conducting raids in Kaleeswari

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடைபெற்றது. பல ஆண்டுகளாக முறையான வருமான வரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை, திண்டுக்கல், பழனி, கோவை, புதுச்சேரி உட்பட 54 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.

தலா 10 பேர் வீதம் 540 அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காளீஸ்வரி நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதற்கான தொழிற்சாலைகள், சென்னை, கோவை, காக்கிநாடா ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த எண்ணெய் நிறுவனமானது கடந்த 5 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சுமார் ரூ.100 கோடிக்கும் மேலாக வரி ஏய்ப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax officials conducting raids in Kaleeswari company for 2nd day also. Officials suspects Rs. 100 Cr tax evasion will be done.
Please Wait while comments are loading...