For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை.. சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

சென்னையில் பல இடங்களில் விளம்பரப்பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். பலர் இந்த விளம்பர பலகை முறைக்கு எதிராக அவ்வப்போது வழக்கு தொடுப்பது உண்டு.

Jail and Fine for advertising without permission - Chennai corporation

சாலையில் இருக்கும் விளம்பர பலகைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும். இதனால் சமயங்களில் விபத்துக்களும் நேர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்தது தெரியவந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்த விதியை மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளது. விளம்பரம் செய்ய கட்டட உரிமையாளர் அனுமதித்து, மாநகராட்சியிடம் அனுமதி வாங்காமல் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இது விளம்பர பலகை மட்டும் இல்லாமல் சுவரொட்டி, சுவற்றில் பெயிண்டில் வரைதல் அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும் என்றும் கூறியுள்ளது.

English summary
Chennai corporation puts new rule street advertisement. From the new rule advertising without permission is a crime. Corporation can sue the people who advertise without permission. They can sue them for 3 years and put fine of 10 thousand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X