நீட்.. கவுதமியிடம் பாசிட்டிவ் பதில் சொன்ன ஜாவடேகர்.. தவிப்பில் தமிழக பாஜக பிரமுகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கவுதமியிடம் அவர் எப்படி அப்படி சொல்லலாம்? | Oneindia Tamil

  சென்னை: நீட் தேர்வு குறித்து நடிகை கவுதமியிடம் சாதகமான பதிலை அமைச்சர் வழங்கியுள்ளதன் மூலம் நீட் குறித்து பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக தோற்றத்தை உருவாக்கும் என்பதால் மாநில பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.

  நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் அந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நீட் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டாவது விலக்கு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் காணப்படுகிறது.

   ஜாவடேகருடன் கவுதமி சந்திப்பு

  ஜாவடேகருடன் கவுதமி சந்திப்பு

  கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை நடிகை கவுதமி சந்தித்தார். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று கவுதமி மனு அளித்துள்ளார்.

   பாட திட்டத்தை தயார் செய்ய

  பாட திட்டத்தை தயார் செய்ய

  மத்திய அரசு விலக்கு அளித்தவுடன் அந்த காலத்துக்குள் மாநில அரசு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் 3 ஆண்டுகள் விலக்களித்தால் நன்றாக இருக்கும் என்று கவுதமி கேட்டதற்கு அவரது மனு பரிசீலனை செய்து முடிவு எடுக்க 2 வார கால அவகாசம் தேவைப்படும் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

   பாஜகவின் இரட்டை நிலைப்பாடு

  பாஜகவின் இரட்டை நிலைப்பாடு

  தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்றால் நீட் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆனால் கவுதமிக்கு ஜாவடேகர் அளித்த வாக்குறுதியை பார்க்கும்போது நீட் தேர்வில் பாஜகவுக்கு இரட்டை நிலைப்பாடு உள்ளதையே காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

   மாநில பாஜக அதிருப்தி

  மாநில பாஜக அதிருப்தி

  நீட் தேர்வை முன்னெடுத்துச் செல்ல பாஜகவினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துச் செல்லும் நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகையிடம் அத்தகைய வாக்குறுதியை அமைச்சர் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

   எச்.ராஜா மறுப்பு

  எச்.ராஜா மறுப்பு

  மத்திய அரசுக்கும், மாநில பாஜகவுக்கு கருத்து வேறுபாடு நிலவுகிறதா என்ற கருத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மறுத்துள்ளார். மேலும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதை மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. கவுதமிக்கும் அமைச்சர் ஜாவடேகருக்கும் இடையே எந்த மாதிரியான கருத்து பரிமாறப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The favour statement made by HRD Minister Javadekar to Gauthami on Neet shows BJP's double standards. State BJP upset over Minister's assurance on Neet to Gauthami.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற