For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ் அப்-ல் உலா வரும் ‘ஜெ. அமைச்சரவை’... அடடே, ஓ.பி.எஸ்ஸைக் காணோமே...!

Google Oneindia Tamil News

சென்னை : விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற உள்ள புதிய அமைச்சர்கள் எனக் கூறி வாட்ஸ் அப்பில் ஒரு பட்டியல் உலா வந்து கொண்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் முதல்வர் பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார்.

Jaya's new cabinet... Whats app spread

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால், மீண்டும் முதல்வராவதில் இருந்த சட்டசிக்கல் ஜெயலலிதாவிற்கு விலகியது.

எனவே, விரைவில் அவர் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் போது, அவரது அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் என்பதைப் போல் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதில் பின்வருமாறு அமைச்சர்கள் பெயர் பட்டியல் உள்ளது.

1. ஜெயபால்
2. வேலுமணி
3. தோப்பு வெங்கடாசலம்
4. வளர்மதி
5. கோகுலஇந்ரா
6. சம்பத்
7. தங்கமணி
8. நத்தம் விஸ்வநாதன்
9. ராஜேந்திர பாலாஜி
10. எடபாடி பழனிசாமி
11. உதயகுமார்
12. செந்தில் பாலாஜி
13. விஜயபாஸ்கர்
14. மோகன்
15. செல்லூர்ராஜு
16. வீரமணி
17. உதயகுமார்
18. வைத்தியலிங்கம்
19. பழனியப்பன
20. காமராஜ்
21. டி.ஜெயகுமார்
22, வி .பி .கலைராஜன்
23, கே . மனோகரன்
24. பி . சரோஜா
25. கே .வி . ராமலிங்கம்
26, கே.ஏ .செங்கோட்டையன்
27. சி.சண்முகவேல்
28, வளர்மதி
29, எம் .பி .எஸ் .சிவசுப்பிரமணியன்
30, நைனார்

இதில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான விசயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் தற்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மிஸ்ஸிங் என்பது தான்.

ஒரு வேளை, மக்களின் முதல்வர் மாநில முதல்வர் ஆனதும், தற்போதைய மாநில முதல்வருக்கு மக்கள் முதல்வர் பதவி அளிக்கப்படுமோ...?

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...!

English summary
A message is spreading in Whats app about Jayalalithaa's new cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X