சட்டசபையில் ஜெ. படத்தை திறக்க கூடாது என நீதிமன்றத்தில் முறையிடுவோம்- அன்பழகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்- வீடியோ

  சென்னை: ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று திமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் பூபதிக்கு அவர் மனு அளித்துள்ளார்.

  ஜெயலலிதா படம் நாளை சட்டசபையில் திறக்கப்படவுள்ளது. அவர் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

  Jayalalitha's photo inauguration: J.Anbazhagan gives memorandum to Assembly secretary

  இந்நிலையில் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை செயலாளர் பூபதியிடம் திமுக எம்எல்ஏ அன்பழகன் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

  அதில் ஜெயலலிதா படம் திறப்பது குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம். அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என வழக்கு நடைபெறுகிறது

  வழக்கு விசாரணையின் போது சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பது தவறு. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்சிடம் நாளை ஜெயலலிதா படத் திறப்பு குறித்து முறையீடு செய்யப்படும் என்று சட்டசபை செயலாளரிடம் கொடுத்த மனுவில் ஜெ.அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK opposes Jayalalitha's photo inauguration in assembly. DMK MLA gives memorandam to Assembly Secretary Boopathi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற