‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு ஜாமீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: சமூக செயற்பாட்டாளரும், ஆவணப்பட இயக்குநருமான திவ்யாபாரதிக்கு மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார் திவ்யாபாரதி. 2009ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போது, மர்மமான முறையில் மரணம் அடைந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் திவ்யபாரதி ஈடுபட்டது தொடர்பான வழக்கில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

Kakoos documentary director gets bail

திவ்யபாரதி கைது செய்யப்பட்ட உடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதே நீதிமன்றத்தில் அவருக்கான ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு திவ்யபாரதிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Kakkoos Movie Director Divya bharathi Arrested-Oneindia Tamil

ஒருவாரம் மாவட்ட நீதிமன்றத்தில் திவ்யபாரதி தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kakoos documentary director Divya Barathi has got contition bail.
Please Wait while comments are loading...