கள்ளக்குறிச்சியில் மோதலை தவிர்க்க போலீஸ் குவிப்பு.. பிரதமர் போஸ்டர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பரபர
கள்ளக்குறிச்சி: பிரதமர் போஸ்டர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், அங்கு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல தமிழ்நாட்டிலும் பாஜகவும் பல நிகழ்ச்சிகளை நடத்தியது. மோடியின் பிறந்த நாளுக்காகப் பல இடங்களில் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

போஸ்டர்
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் வஉசி நகர் 7ஆவது தெரு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 16 இரவு பாஜகவினர் சார்பில் அங்குள்ள கடைகளில் போஸ்டர் ஒட்டியதாகத் தெரிகிறது. இருப்பினும், தனது கடையின் முன்பு போஸ்டர் எதுவும் ஒட்ட வேண்டாம் என்று கடையின் உரிமையாளர் தினேஷ் பாஜகவினரிடம் கூறியதாகத் தெரிகிறது.

கிழிப்பு
இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் பாஜக நிர்வாகிகள் இரவு நேரத்தில் சென்று அங்கு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதன் காரணமாகச் செப்டம்பர் 17இல் அந்த கடையின் உரிமையாளர் தினேஷ், தனது கடையில் அனுமதி இல்லாமல் ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள், போஸ்டரை கிழித்த தினேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

விசாரணை
இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இருதரப்பினரிடையே சமாதானம் ஏற்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடந்தும் போதே பாஜக நகரத் தலைவர் சத்யா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மனித வள மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளர் செல்லப்பன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

பீர் பாட்டில்
அவர்கள் போலீசார் விசாரணை நடத்தி வந்த இடத்தில் காலி பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். அந்த காலி பீர் பாட்டிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது பட்டதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விசாரணை நடத்தி வந்த போலீசாரையே பாஜகவினர் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ட

கைது
போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசிய கள்ளக்குறிச்சி பாஜக நகரத் தலைவர் சத்யா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து அந்த பகுதி முழுக்க பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அங்கு மோதல் மேலும் அதிகரிக்காமல் இருக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அங்கு நேரில் சென்று விசாரணையும் நடத்தி உள்ளார்.
-
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்











Click it and Unblock the Notifications