தமிழக அரசு துறை ஊழல் பற்றி இங்கே புகார் கொடுங்க.. விடாமல் விரட்டும் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று நடிகர் கமல் குற்றம்சாட்டியதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே ஆதாரம் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்று அமைச்சர்கள் கண்டித்து பேட்டிகளை அளித்தனர். இதனால் கமல் பதிலடிக்கு புது வழி கண்டுபிடித்தார்.

டிவிட்டரில் கோரிக்கை

டிவிட்டரில் கோரிக்கை

அமைச்சர்களுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "அமைச்சர்களுக்கு ஆதாரம் வேண்டுமாம். அமைச்சர்கள் கேட்ட ஆதாரங்களையும் ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள்" என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டார்.

இணையதளம்

இணையதளம்

புகார்களை அனுப்ப அமைச்சர்களை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் முகவரியையும் டிவிட்டரில் கமல் வெளியிட்டார். கமல்ஹாசன் வெளியிட்ட முகவரி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். அந்த முகவரிக்கு ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வைக்க ரசிகர்கள் தயாரானபோது முகவரி பற்றிய விவரங்கள் அனைத்தும் திடீரென மாயமாகிவிட்டன.

திடீர் மாயம்

திடீர் மாயம்

வெப்சைட்டில், அமைச்சர்களின் தொடர்பு எண்கள், இமெயில் முகவரி, அவர்களின் சொந்த ஊர் பற்றிய முகவரி விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் போன்றவை எதுவும் இல்லாமல் காலியாக காணப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஊழல் ஆதாரங்களை அனுப்ப முடியாமல் குழம்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் குழப்பத்தை போக்க கமல்ஹாசன் நேற்று ரசிகர்களுக்கு புதிய அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளஅார்.

புது அறிவுரை

புது அறிவுரை

அனைத்து மாவட்ட ரசிகர்மன்றத்திற்கும் அவர் அனுப்பியுள்ள தகவலில், அமைச்சர்களின் முகவரிக்கு பதிலாக ஊழல் புகார் ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார். லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகம் இயங்கும் எண்.293, எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர், சென்னை-600016 என்ற முகவரியையும் 22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார் கமல்.

ரசிகர்கள் தீவிரம்

ரசிகர்கள் தீவிரம்

22321005 என்ற பேக்ஸ் எண், dv-ac@nic.in என்ற இமெயில் முகவரி ஆகியவற்றிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினருக்கும் அனுப்பி வைத்து உள்ள தகவலில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த முகவரிக்கு ரசிகர்கள் ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வருகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal request his fans to sent corruption complaint to anti corruption police, says sources.
Please Wait while comments are loading...