ஒரு கமாவை மாத்தி போட்டு எவ்ளோ கன்பியூஸ் பண்ணிட்டார் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  'அகில இந்திய விவசாயிகள் கட்சி'.. வந்து சேருங்கள்.. கமல் திடீர் அழைப்பு!..வீடியோ

  சென்னை: கமல் மாத்திப்போட்ட ஒரே ஒரு கமாவினால் ஒரே குழப்பமாகி விட்டது. அகில இந்திய விவசாயிகள், கட்சி, என்று போட நினைத்து அவர் போட்ட ட்வீட் ஒரு மணிநேரத்தில் அலற வைத்து விட்டது.

  நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளார். அதற்காக ஹேஸ்டேக், ஆப் எல்லாம் அறிமுகம் செய்துள்ளார்.

  மையம் விசில் என்று தனது பிறந்த நாளில் அறிவித்து தனது கட்சியின் சின்னம் விசில்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

  அரசியலில் கமல்

  அரசியலில் கமல்

  தான் அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கமல் அறிவித்தாலும், கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் போட்ட ஒரு ட்விட் எல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

  கமா மாறியதே

  அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம். இதுதான் அவர் போட்ட ட்வீட். இதில் கமாவை மாற்றி போட்டு விட்டார்.

  கொள்கை ரெடி

  உடனே அவரது கட்சியின் பெயர் விவசாயிகள் கட்சி என்று பேச ஆரம்பித்து விட்டனர்.
  ட்விட்டரில் கட்சியின் கொள்கைகளை கூட வெளியிட்டு விட்டனர்.

  கவனம் ஆண்டவரே

  கவனம் ஆண்டவரே

  கமல் ஒவ்வொரு முறையும் தனது ட்விட்டில் ஏதாவது ஒரு எழுத்துப்பிழையை விடுவார். இம்முறை ஒரே ஒரு கமாவை மாற்றிப் போட்டு ரசிகர்களையும். அவரை பின்பற்றுபவர்களையும் அல்லோல கல்லோல படுத்தி விட்டார்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Kamal Haasan's single Tweet created big flutter this evening after he placed a wrong comma in a wrong place.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X