அன்புத் தங்கைக்கு 50 வயது.. பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
களைகட்டிய கனிமொழி பிறந்த நாள்..ஸ்டாலின் வாழ்த்து..வீடியோ

சென்னை: கனிமொழி தனது 50ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார். அண்ணன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பொன்னாடை போர்த்தி கனிமொழியை வாழ்த்தினார் ஸ்டாலின்.

கனிமொழி வழக்கமாக சிஐடி காலனியில் தனது தந்தை முன்னிலையில் கேக் வெட்டும் கனிமொழி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனை செய்ய முடியவில்லை. காரணம் வயது முதிர்வினால் கருணாநிதி கோபாலபுரத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அதனால் கனிமொழி தனது தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.

கனிமொழி எம்பியின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு சிஐடி காலனி வீடு களைகட்டியுள்ளது. தொண்டர்கள் குவிந்துள்ளனர். வாழ்த்து முழக்கமிட்டு வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் வழி நெடுகிலும் ஒட்டப்பட்டுள்ளன.

விடுதலையால் உற்சாகம்

விடுதலையால் உற்சாகம்

கனிமொழியை கடந்த 7 ஆண்டுகாலமாக வாட்டி வந்த 2 ஜி வழக்கு முடிந்து விடுதலை பெற்றுள்ளார். இதனால் கடந்த ஆண்டுகளை விட கூடுதல் உற்சாகத்துடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் கனிமொழி.

அண்ணனிடம் ஆசி

அண்ணனிடம் ஆசி

கனிமொழிக்கு இந்த ஆண்டு பொன்விழா பிறந்தநாளாக அமைந்து விட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அண்ணன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அப்போது ஸ்டாலின் மஞ்சள் கலர் பொன்னாடை போர்த்தினார். துர்க்கா ஸ்டாலின் நீல கலர் பட்டுப்புடவை பரிசளித்தார்.

கோபாலபுரத்தில் வாழ்த்து

கோபாலபுரத்தில் வாழ்த்து

கோபாலபுரம் சென்ற கனிமொழி, தனது தந்தையிடம் ஆசி பெற்றார். கனிமொழிக்கு வாழ்த்து கூறினார் கருணாநிதி. கனிமொழிக்கு தொண்டர்கள் பலரும் வாழ்த்து கூறி பரிசுகளை அளித்தனர்.

வாழ்த்து போஸ்டர்கள்

வாழ்த்து போஸ்டர்கள்

கடந்த ஆண்டு வறட்சி தாண்டவமாடியதால் விவசாயிகள் தற்கொலை அதிகமானதால் தனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் கனிமொழி. இந்த ஆண்டு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற உற்சாகம் ஒருபக்கம், பொன் விழா பிறந்தநாளாக கொண்டாட்டம் மறுபக்கம் என சிஐடி காலனி திருவிழா கோலம் பூண்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK president M Karunanidhi and his son and party Treasurer M K Stalin were among those who greeted party MP Kanimozhi on her 49th birthday on Friday. Kanimozhi's CIT Colony residence decked up for the occasion, even as her supporters had organised welfare activities on the occasion.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற