For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொது சிவில் சட்டம் கூடாது: கனிமொழி பேச்சு

பொது சிவில் சட்டம் கூடாது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: பெண்களை மையப்படுத்தி கொண்டு வரப்படும் பொது சிவில் சட்டம் கூடாது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

kanimozhi opposed Uniform Civil Code

அக்கட்சியின் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசுகையில், முஸ்லிம் பெண்கள் நலன் பற்றி பேசும் பாஜகவுக்கும் மோடிக்கும் உண்மையில் பெண்கள் நலனில் அக்கறை இருக்குமானால் முதலில் 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை

பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அனைத்து சாதியினரையும், பெண்களையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு் முதலில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

English summary
DMK MP Kanimozhi opposed to Uniform Civil Code. vck has organised the Uniform Civil Code meet at chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X