• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கண்ணீர், கலக்கம், அவமானங்கள்... கடைசியாக கனிமொழிக்கு கிடைத்த சிரிப்பு!

By Gajalakshmi
|
  2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ

  சென்னை : 2ஜி அலைக்கற்றை வழக்கில் கூட்டுச்சதி செய்ததற்காக கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருடைய 6 ஆண்டுகால வாழ்க்கை கண்ணீர், கலக்கம், அவமானங்கள் என்றே கடந்து சென்றன.

  திமுக தலைவரின் மகள், பத்திரிக்கைத் துறையில் சிறிது காலம் பணியாற்றியதால் பத்திரிக்கையாளர்களின் நண்பன், இலக்கிய படைப்பாளி என்று பன்முகத்தோடு வலம் வந்து கொண்டிருந்தார் கனிமொழி. 2007ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக தமிழ் கலாச்சாரத்தை நகர மக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

  திமுக மகளிரணியின் செயல்பாடுகளை கவனித்து வந்த கனிமொழி, இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். 2007ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக கனிமொழி நாடாளுமன்றத்தில் கால்எடுத்து வைத்தார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா, மீனவர்கள் பிரச்னை மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை சுட்டிக் காட்டி பல முறை பேசியுள்ளார் கனிமொழி.

  குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட கனிமொழி

  குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட கனிமொழி

  2ஜி ஊழல் என்னும் வழக்கில் சிக்காத வரை கனிமொழியின் அரசியல் வாழ்க்கையானது எந்த சிக்கலும் இல்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது. 2011ம் ஆண்டில் சிபிரு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், "கூட்டுச்சதி செய்தார்' என்று சி.பி.ஐ குற்றம் சுமத்தி, அவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது.

  கண்கலங்கிய கனிமொழி

  கண்கலங்கிய கனிமொழி

  இதனால் எந்த நேரத்திலும் கனிமொழி கைது செய்யப்படலாம் என்ற நிலையில் ஜாமின் கேட்டு விண்ணப்பிக்க. ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து கனிமொழி 2001ம் ஆண்டில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். தான் சிறை செல்வது உறுதியான போது நீதிமன்றத்திலேயே உடைந்து போன கனிமொழி தாயார் மற்றும் கணவரை பார்த்து கண்கலங்கினார்.

  நிம்மதியளித்த தீர்ப்பு

  நிம்மதியளித்த தீர்ப்பு

  இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்ந்து நடைபெற்று வந்ததால் கனிமொழி மீதான ஊழல் கரை என்பது துடைக்கப்படாமல் அவர் செல்லும் இடம் எல்லாம் அவரை விடாமல் துரத்தி வந்தது. சுமார் 6 ஆண்டுகளாக ஊழல் கறை சுமந்து சிறைக்கு சென்றவர் என்ற அடையாளத்தோடு அரசியல் பணியாற்றி வந்த கனிமொழிக்கு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு அவரது பழைய சிரிப்பை முகத்தில் கொண்டு வந்துள்ளது.

  ஊழல் கறை துடைக்கப்பட்டது

  ஊழல் கறை துடைக்கப்பட்டது

  இன்று காலையில் நீதிமன்றத்திற்குள் செல்லும் போதே கனிமொழி தனது கணவர் அரவிந்தன் கையை பிடித்துக் கொண்டு அனைவரையும் பார்த்து நெருடலான சிரிப்புடனே புன்னகைத்து விட்டு சென்றார். பின்னர் தீர்ப்பு வெளியான செய்தி கேட்டு மனமகிழ்ச்சியோடு வெளியே வந்தார். இன்று நீதிமன்றம் வரும்போதே சிகப்பு சேலையில் கருப்பு பார்டர் போட்ட திமுக நிறத்தை சுட்டிக்காட்டும் சேலையை கனிமொழி அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Kanimozhi's 6 years hardened life with the tears and accusation has been brought out by today's judgement and she is now relieved from the scam allegations.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more