காவிரிக்காக சிம்பு அழைப்பு: கன்னடர்கள் வரவேற்பு- குவியும் வீடியோக்கள், போட்டோக்கள் #UniteForHumanity

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிம்புவின் அழைப்பிற்கு கன்னடர்கள் வரவேற்பு

  சென்னை: காவிரி பிரச்சினைக்கு சுமுத தீர்வு காண்பது குறித்து சிம்பு அழைப்பு விடுத்ததற்கு கர்நாடக மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கான போட்டோக்களும், வீடியோக்களும் குவிகின்றன.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடிகர் சங்கம் சார்பில் அறவழி போராட்டம் நடைபெற்றது.

  அந்த போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதற்கான விளக்கத்தை அவர் தனது இல்லத்துக்கு செய்தியாளர்களை சந்தித்து அளித்தார்.

  மௌன போராட்டத்தில் உடன்பாடு இல்லை

  மௌன போராட்டத்தில் உடன்பாடு இல்லை

  அப்போது சிம்பு கூறுகையில் நடிகர் சங்கம் நடத்திய மவுன போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மௌனமாக இருந்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது. காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் யாரும் நமக்கு தண்ணீர் வாங்கி கொடுக்க மாட்டார்கள்.

  ஆறாய் ஓடியது

  ஆறாய் ஓடியது

  தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.... அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்றும் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  கர்நாடகத்தில் வரவேற்பு

  கர்நாடகத்தை சேர்ந்த இளைஞர் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது குறித்து ஆதரவு தெரிவித்து கன்னடத்தில் பேசியுள்ளார்.

  பேஸ்புக்கில் வீடியோ

  அதுபோல் ரேகா ராணி என்ற பெண் காவிரி நீரை தருகிறோம் என்று ஒரு டம்ளர் நீரை கொடுத்து வீடியோ எடுத்துள்ளார்.

  கன்னடர் ஆதரவு

  கர்நாடகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தண்ணீர் கொடுப்பது குறித்து ஆதரவாக பேசியுள்ளார்.

  குவியும் ஆதரவு

  தமிழகத்தைச் சேர்ந்த பெங்களூரில் பணிபுரியும் இளைஞரும், கன்னடர் ஒருவரும் அரசியல் பிரச்சினைகளுக்காகவே காவிரி விவகாரம் பெரிதாக்கப்படுகிறது. எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்க வேண்டும் என்கின்றார்.

  இரு மாநில இளைஞர்கள்

  இரு மாநில இளைஞர்களும் ஒருவருக்கொருவர் தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் அடங்கியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் இந்த கொடியை பறக்கவிட்டு தண்ணீரை குடித்துக் கொள்கின்றனர். சிம்புவின் வரவேற்பை ஏற்று இதுபோன்று ஏராளமான வீடியோக்கள், போட்டோக்கள் குவிகின்றன. சிம்புவின் இந்த அழைப்பால் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மேம்படும், ஒற்றுமை ஏற்படும், நல்லுறவு கூடும் என்பதில் சந்தேகமே இல்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Simbu requested Karnataka people to bring 1 tumbler of water for Tamil people on April 11 and send video and photos for the same. Karnataka people accepted his request and shares the video.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற