For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒன்று முதல் 10 வரை.... கருணாநிதியின் 'தசாவதாரம்'!

Google Oneindia Tamil News

சென்னை : அண்ணா தலைமையில் நடந்த முதல் மாநில மாநாடு முதல் இன்று திருச்சியில் பிரமாண்டமாக நடந்து வரும் 10வது மாநில மாநாடு வரை திமுக தலைவர் கருணாநிதி கடந்து வந்த பாதை மிகப் பெரியது.. நீண்ட நெடியது.

பன்முகச் சிறப்பு அம்சங்கள் கொண்டவர் கருணாநிதி. அண்ணா தலைமையில் முதல் மாநாட்டைக் கண்ட கருணா்நிதியின் தலைமையில் இன்று திமுகவினர் 10வது மாநில மாநாட்டை ரசித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நேரத்தில் கருணாநிதி குறித்த சில சுவாரஸ்ய அம்சங்களைத் திரும்பிப் பார்க்கலாம்...

திருவாரூர் தட்சிணாமூர்த்தி

திருவாரூர் தட்சிணாமூர்த்தி

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள, திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.

அழகிரியால் ஈர்க்கப்பட்டவர்

அழகிரியால் ஈர்க்கப்பட்டவர்

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட, பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13 வது வயதில் அரசியலில் அடியெடுத்துவைத்தார்.

சாதனைத் தலைவர்

சாதனைத் தலைவர்

12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10 முறை தி.மு.க. தலைவர் என்ற சாதனையை, இந்தியாவில் இது வரை யாரும் செய்ததில்லை. கருணாநிதிக்கு மட்டுமே உரியது இது.

படிப்பார்.. போனில் பிடிப்பார்

படிப்பார்.. போனில் பிடிப்பார்

தினசரி வெளிவரும் செய்தித்தாள்கள், முக்கிய வார இதழ்கள் ஆகியவற்றை படித்து விட்டு, அதில் உள்ள விஷியங்கள் குறித்து கருணாநிதி சம்பத்தப்பட்ட நபர்களை போனில் அல்லது நேரில் அழைத்து விசாரிப்பாராம்.

தங்கத்தைக் தீண்டாத தலைவர்

தங்கத்தைக் தீண்டாத தலைவர்

தி.மு.க. தேர்தல் செலவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்தைக் இதுவரை கருணாநிதி கழற்றியதே இல்லையாம். ஆனால், இதுவரை அவர் ஒரு முறை கூட , தங்க சங்கிலியை தனது உடலில் அணிந்ததில்லையாம்.

எம்.ஜி.ஆரின் ஆண்டவர்...

எம்.ஜி.ஆரின் ஆண்டவர்...

அன்று, கருணாநிதியை, ஆண்டவரே என்று எம்.ஜி.ஆர் அழைப்பார். அதேபோல மூனாகானா என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அழைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

பிள்ளைகளுக்குத் தலைவா...

பிள்ளைகளுக்குத் தலைவா...

ஆனால், கருணாநிதியின் மனைவி, மகன்கள் மற்றும் பேரன் பேத்திகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே `தலைவர்'என்று தான் கருணாநிதியை அழைக்கின்றனர்.

மூளையே டைரி

மூளையே டைரி

தினமும் டைரி எழுதும் பழக்கம் கருணாநிதி கிடையாது. ஆனால், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி' என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.

அசாத்திய நினைவுத்திறன்

அசாத்திய நினைவுத்திறன்

எந்த ஊருக்கு சென்றாலும் சரி, அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றாலும் சரி, கடந்த முறை அங்கு வந்த போது, நான் பார்த்த நபர்கள் பற்றியோ அல்லது பேசிய பேச்சுக்கள் பற்றியோ அப்படியே எடுத்துக் கூறும் அசாத்திய திறமை படைத்தவர். அந்த அளவு நினைவாற்றில் கொண்ட பெரும் அரசியல் தலைவர். இதுவரை இப்படி ஒரு அரசியல் தலைவர் இருந்ததில்லை.

கருணாநிதிக்கு இரண்டு பக்கமும் பக்கா...

கருணாநிதிக்கு இரண்டு பக்கமும் பக்கா...

பரவலாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாக செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்கு தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தியே ஒரு முறை தெரிவித்திருந்தார்.

முன்பு வாக்கிங்... இப்போது யோகா மட்டுமே

முன்பு வாக்கிங்... இப்போது யோகா மட்டுமே

முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருந்த கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் செல்வதை நிறுத்திட்டாராம். தற்போது கருணாநிதி தினமும் யோகா செய்து வருகின்றார்.

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும்

இவருக்கு யோகா கற்றுக் கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார் .யோகா செய்யும்போது, நாராயண நமஹ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்' என்று கருணாநிதி கூறுகின்றாராம். ஆனால், இரண்டும் ஒன்று தான் என்று தேசிகாச்சாரி கூறியுள்ளார்.

சங்கு மார்க் லுங்கின்னா ஓ.கே...

சங்கு மார்க் லுங்கின்னா ஓ.கே...

பெரும்பலான அரசியல் தலைவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் போது, பேண்ட் அல்லது வெள்ளை வேஷ்டியில் இருப்பார்கள். ஆனால், கருணாநிதி தனது வீட்டிற்கு சென்ற உடன் லுங்கிக்கு மாறிவிடுவார். அதுவும் சங்கு மார்க் வேட்டி தான் அவருக்கு பிடித்த லுங்கி. இது தான்யா திருப்தியா இருக்கு என்பாராம்.

இப்ப சுத்த சைவம்

இப்ப சுத்த சைவம்

ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்ட கருணாநிக்கு நாளடைவில், செரிமான பிரச்னை ஏற்படவே, சைவத்திற்கு மாறிவிட்டார். தினமும் தனது சாப்பாட்டில் ஏதாவது ஒரு வகைக் கீரையை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

முன்பு ஹாக்கி.. இப்ப கிரிக்கெட்

முன்பு ஹாக்கி.. இப்ப கிரிக்கெட்

கருணாநிதிக்கு சிறு வயதில் பிடித்த விளையாட்டு ஹாக்கி. ஆனால், தற்போது அவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். ஒரு நாள், தொடர் கிரிக்கெட் பற்றி, தனது கட்சி நிர்வாகிகளுடன் மிக ஆர்வமாக விவாதிப்பாராம்.

வாழ்வதே இல்லை.. சாவதே இல்லை..

வாழ்வதே இல்லை.. சாவதே இல்லை..

வீரன் ஒருமுறைதான் சாவான், கோழை பலமுறை சாவான்' என்பது புகழ் பெற்ற பொன்மொழி. அதை வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை' என்று மாற்றிப் பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்று சொன்னால் அது மிகையில்லை.

அப்படியே கமலஹாசன் மாதிரி...

அப்படியே கமலஹாசன் மாதிரி...

பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க் கேள்வி போட்டு சமாளிப்பது கருணாநிதியின் பாணி. ஆண்டவனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ? என்ற கேள்விக்கு, அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்று தான் பார்க்க வேண்டும் என்று லாகவமாக பதில் அளித்து சமாளித்துவிட்டார்.

இது கருணாநிதியின் விருப்பம்

இது கருணாநிதியின் விருப்பம்

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்'என்று தனது கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை தனது குடும்பத்தினரிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளார்.

மெளனமான நேரம்

மெளனமான நேரம்

பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்களை வைத்துள்ளார். முக்கியமான நாட்களின் போதும், அவரது மனம் காயம்படும்போதும், அந்த படத்தின் அருகில் சென்று சிறிது நேரம் மவுனமாக நிற்பாராம்.

மனதுக்குள் காப்பியம்.. எப்போதும் திருக்குறள்

மனதுக்குள் காப்பியம்.. எப்போதும் திருக்குறள்

கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள் புத்தகம்.

தோல்வியே அறியாதவர்

தோல்வியே அறியாதவர்

1957 ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக சட்ட மன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 1957 ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984 ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் போட்டியிடவில்லை. இதுவரை கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். தோல்வி என்பதையே காணாதவர்.

40 வருடங்களாக தலைவா...

40 வருடங்களாக தலைவா...

தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினரான கருணாநிதி, 1957 ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.

தனிமையே விரோதி

தனிமையே விரோதி

கருணாநிதிக்கு விரோதி என்பது தனிமை தான். எப்போதும் கட்சியினர் அல்லது நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்று விரும்புவாராம். அவர்களுடன் அரட்டை போட்டுக் கொண்டு எப்போதும் அவர் இருக்கும் இடம் சிரிப்பலையால் நிரம்பிவிடுமாம். அது போல் தான் இதுவரை நடந்து வருகின்றதாம்.

பெயர் வைத்த ராதா

பெயர் வைத்த ராதா

தூக்குமேடை என்ற நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு அளித்தார். இன்று வரை அப்பெயர் தான் அவரது சிறப்பை அடையாளப்படுத்தி வருகின்றது என்றால் அது மிகையல்ல.

English summary
Here is a compilation of known and unknown facts about DMK chief Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X