For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்பாக்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி காட்டிய சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள் நாங்கள்- கருணாஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகள்- வீடியோ

    சென்னை: துப்பாக்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி காட்டிய சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள் நாங்கள். இந்த கைது நடவடிக்கைகெல்லாம் அஞ்ச மாட்டோம் என்று கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடானை எம்எல்ஏவுமான கருணாஸ் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம்.

    இடைஞ்சல் கொடுத்தால் கொல்வது நியாயம்

    இடைஞ்சல் கொடுத்தால் கொல்வது நியாயம்

    எனது ஆதரவாளர்கள் மீது போலீஸார் கை வைத்தால், நான் கை கால்களை உடைப்பேன். கொலை செய்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டும். உன்னை வாழ விடாமல் இடைஞ்சல் கொடுத்தால் கொல்வது நியாயம் என்று பேசினார்.

    7 பிரிவுகளின் கீழ் வழக்கு

    7 பிரிவுகளின் கீழ் வழக்கு

    இது கொலை வெறியை தூண்டும் வகையில் இருந்தது. மேலும் தி.நகர் டிசி அரவிந்தனை ஒருமையில் விமர்சனம் செய்தார். இதனால் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சந்திப்பேன்

    சந்திப்பேன்

    இதையடுத்து அவர் இன்று சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன்.

    சிறைச்சாலைகள் எங்களுக்காக...

    சிறைச்சாலைகள் எங்களுக்காக...

    துப்பாக்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி காட்டிய சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள் நாங்கள். இந்த சிறைச்சாலைகள் எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது என்றார் கருணாஸ். அவர் கைது செய்யப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    English summary
    MLA Karunas says that We are heir of Seevalapperi Pandy, we dont get panic even in the gun point.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X