ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜவுளித்துறையை முடக்கும்... கொந்தளிக்கும் கரூர் ஜவுளித்துறையினர்-வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் ஜவுளித்துறையினர் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியதால் ஜவுளித்துறையில் சில கோடிகள் நஷ்டம் உண்டாகியுள்ளது.

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறை அமலுக்கு வருகிறது. வெவ்வேறு விதமான பொருட்களுக்கு 0 முதல் -28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளது.

 Karur cloth merchants protested against Gst

இதில், ஜவுளித்துரையில் பருத்தி நூல்களுக்கு 5 சதவீதம் வரி, பாலியெஸ்டர் நூல்கலுக்கு 18 சதவீதம் வரி என விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் உற்பத்தியில் இருந்து அது துணியாக மாறுவதுவரை ஒவ்வொரு நிலைகளில் 5-18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இதனால் ஜவுளித்துறை மிகவும் நஷ்டமடையும் எனக் கூறி கரூர் ஜவுளி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இந்த ஒரு நாள் போராட்டத்திலேயே 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என போராட்டத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்தியூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகலீல் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு 18 சதவீதம் வரிவித்துள்ளதால் உபகரணங்கள் வாங்குவது மிகவும்கடினமான விஷயமாகி அதனால் எங்கள் வாழ்க்கையையே பாதிக்கப்படும் என கூறி போராட்டம் நடத்தினர். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பல குழப்பங்கள் தான் எற்படும் என பொருளாதார நிபுணர்கள் கூரிவருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Karur cloth merchants protested against gst which is going to be practiced from july 1st.
Please Wait while comments are loading...