கொட்டித் தீர்த்த கோடை மழை.... மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழகம் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், தேனி, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே கடும் வெயில் அடித்து மக்களை வதைத்து வருகிறது. எல் நினோ தாக்கத்தால் வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை மிக சர்வசாதாரணமாகத் தொட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Karur, Theni and Tiruppur got good rainfall yesterday

இந்நிலையில், தேனி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் நேற்று இரவு மழை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்துள்ளது. இதனால் கோடையின் கடும் வெம்மை தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டத்தில் 110-117 டிகி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவி வந்த நிலையில் அங்கு காற்றுடன் கூடிய மழை பெய்த போது வேரோடு மரங்கள் சாய்ந்தன.

கடந்த ஆண்டு கடும் வறட்சியால் அவதிப்பட்ட தமிழகம் இந்தாண்டு அதிகளவு மழை பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே ஆரம்பிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karur, Theni and Tiruppur got good rainfall yesterday. And it rained for 2 hours and in these districts temperature come down due to rain.
Please Wait while comments are loading...