For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சு வியாபாரம் செஞ்சு நொந்து போன கேகேஎஸ்எஸ்ஆர் மகன் ரமேஷ்.. அதிமுகவில் கலந்தார்!

Google Oneindia Tamil News

சென்னை: பஞ்சு வியாபாரம் செய்து அதில் பெரும் நஷ்டமாகி, கடன்காரர்களைச் சமாளிக்க முடியாமல், தந்தையுடனும் மோதலில் ஈடுபட்டு பெரும் விரக்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனின் இளைய மகன் ரமேஷ் இன்று ஒரு வழியாக அதிமுகவில் கலந்து விட்டார். முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்து அவர் அதிமுகவில் இணைந்தார்.

அருப்புக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வைகைச் செல்வன் முயற்சியில் அதிமுகவுக்கு வந்துள்ளார் ரமேஷ். அவரது கடன், கஷ்டமெல்லாம் துடைக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்து கூட்டி வந்துள்ளனராம். முன்பே அவர் அதிமுகவில் சேர்ந்திருப்பார். ஆனால் ஜெயலலிதாவிடமிருந்து சிக்னல் வராமல் இருந்ததாம். இன்றுதான் அது வந்து கட்சியில் கலந்து விட்டார் ரமேஷ்.

ரமேஷ் முடிவால் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு ஆரம்பத்தில் மன வருத்தம் இருந்ததாம். ஆனால் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இதையெல்லாம் பெரிதுபடுத்தாதீங்க, எப்போதும் போல இருங்க என்று ஆறுதல் கூறி ரிலாக்ஸ் ஆக்கினாராம். இதனால் அவர் தற்போது டென்ஷன் குறைந்து இயல்பாக இதை எடுத்துக் கொண்டுள்ளாராம்.

அதிமுக டூ திமுக

அதிமுக டூ திமுக

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தீவிர எம்ஜிஆர் ரசிகர். எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவுக்கு வலது கரம் போலத்தான் இருந்தார். ஆனால் அது பின்னர் முறிந்து போனது. அதிமுகவை விட்டு வெளியேறி வந்தவர் கடைசியில் திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

இரு மகன்கள்

இரு மகன்கள்

ராமச்சந்திரனுக்கு 2 மகன்கள். மூத்தவர் நாராயணன். இளையவர் ரமேஷ். இவர்கள் தவிர ஒரு மகள் உள்ளார். மகன்கள் பெயரில்தான் பெருமளவிலான சொத்துக்களை வைத்துள்ளார் ராமச்சந்திரன். இந்த நிலையில் இளைய மகன் ரமேஷ் அரசியலில் ஈடுபட்டு அது சரிப்பட்டு வராமல், பின்னர் பிசினஸில் இறங்கினார். ஜவுளி, ஸ்பின்னிங் மில் என்று களம் இறங்கினார். கூடவே தனது அண்ணனைப் போல பஞ்சு வியாபாரத்திலும் புகுந்தார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

கைவிட்ட பஞ்சு

கைவிட்ட பஞ்சு

பஞ்சு வியாபாரத்தில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதை சமாளிக்க கடன் வாங்கினார். ஆனால் கடனைக் கட்ட முடியவில்லை. இதனால் கடன் கேட்டவர்கள் நெருக்கினர். ராமச்சந்திரனிடமும் பஞ்சாயத்துக்கு வந்தனர். மகனிடம் ராமச்சந்திரன் விவரம் கேட்கப் போகு அது அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே சண்டையாக மாறியது.

உள்ளே புகுந்த அதிமுக...

உள்ளே புகுந்த அதிமுக...


இந்த சண்டைக்குள் அதிமுகவினர் உள்ளே நுழைந்தனர்... ரமேஷிடம் பேசி அம்மா பக்கம் வந்திருங்க, எல்லாம் சரியாய்ரும் என்று அவர் சொல்ல அந்த யோசனையை ஏற்றார் ரமேஷ்.

இதையடுத்து அதிமுகவில் இணைய விண்ணப்பித்தார். ராமச்சந்திரன் இதை அறிந்து அதிர்ச்சியானார். இந்த நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்து விட்டார் ரமேஷ்.

போனால் போகட்டும்

போனால் போகட்டும்

மகன் போன கவலையில் இருந்தார் ராமச்சந்திரன். ஆனால் மு.க.ஸ்டாலின்தான் இதையெல்லாம் பெரிதுபடுத்தாதீங்க. பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினாராம். இதனால் மகன் அதிமுகவுக்குப் போனால் போகட்டும் என்று இயல்பு நிலைக்கு வந்து விட்டாராம் ராமச்சந்திரன்.

English summary
Former minister KKSSR Ramachandran's younger son Ramesh has joined ADMK today in presence of Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X