மகாத்மா காந்தி பெயரை உச்சரிக்க தினகரனுக்கு தகுதியே இல்லை: கே.பி. முனுசாமி அட்டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாத்மா காந்தியின் பெயரை உச்சரிப்பதற்கு தினகரனுக்குத் தகுதியே இல்லை என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கடுமையாக சாடியுள்ளார்.

சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு வளைத்துள்ளது வருமான வரித்துறை. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறையின் பிடியில் உள்ளனர் சசிகலா குடும்பத்தினர்.

KP Munusamy slams Dinakaran

ஆனால் சசிகலாவின் சகோதரி மகன் தினகரனோ, தாம் காந்தியின் பேரன் இல்லை; என் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன்களா? என்று உளறியிருந்தார். இந்த உளறலுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக கே.பி. முனுசாமி கூறியதாவது:

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் தொடர்பு இல்லை. ஜெயலலிதாவை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சசிகலா குடும்பத்தினர் குவித்து வைத்துள்ளனர்.

தற்போதைய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மகாத்மா காந்தி என்ற பெயரைக் கூறக் கூட தினகரனுக்கு தகுதியில்லை.

இவ்வாறு முனுசாமி சாடினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex Minister KP Munusamy slammed TTV Dinkaran who accused the Centre and the Tamil Nadu state government for the ncome Tax officials raid.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற