தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் இதைத் தான் தந்திருக்கிறது அரசு... குஷ்பு விளாசல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசை விளாசும் குஷ்பு

  கரூர் : தமிழச்சிக்கு ஸ்கூட்டரும், தமிழனுக்கு குவாட்டரும் மட்டும் தான் அரசு உறுதியாக தந்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

  கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய குஷ்பு, சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் ஜெயலலிதா சமாதி முன்பு போய் அமர்ந்தார். அவர் ஏதோ செய்யப்போகிறார் தமிழகத்தில் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்று ஒரு புள்ளி தெரிந்தது, ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

  தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக நீ பெரியவனா, நான் பெரியவனா உன் வேஷ்டியை நான் கிழிக்கிறேன் என் வேஷ்டியை நீ கிழித்துப் பார் என்று சண்டைபோட்டவர்கள், திடீரென ராமன் லட்சுமணன் போல பதவியை பங்கிட்டுக் கொண்டு லூட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

   மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு

  மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு

  மக்களுக்கு என்ன நல்லது என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் நினைக்கவே இல்லை. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த போது மக்களின் வசதி எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது. எத்தனையோ நல்ல திட்டங்களை இந்த கூட்டணி தந்துள்ளது.

  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

  வேலைவாய்ப்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் என எத்தனையோ கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் இன்று பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது.

  தமிழனுக்கு குவாட்டர்

  தமிழனுக்கு குவாட்டர்

  எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் செய்திருக்கும் ஒரே விஷயம் தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் அது மட்டும் தான் உறுதி. ஸ்கூட்டரும், குவாட்டரும் தர உங்களைத் தேர்ந்தெடுப்பார்களா, முதலில் இவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை, இவங்களே இவங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

  குடிகார கணவனை அழைத்து செல்ல

  குடிகார கணவனை அழைத்து செல்ல

  பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் முன்னேற்றத்தை காட்டுவதற்கு இல்லை. கணவன்மார்கள் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார்கள், அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல பெண்களுக்கு கஷ்டமாக இருப்பதால் அவர்களை ஸ்கூட்டரில் உட்கார வைத்து அழைத்து செல்வதற்காகவே அரசு ஸ்கூட்டரைத் தருகிறது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress spokesperson Kushboo says at KArur meeting that tn government given sccoter for Tamizhachi and quarter for Tamizhan, this is the only achievement by government.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற