உள்ளூர் பிரச்சனையை முதலில் தீர்த்து வையுங்கள்... ஓபிஎஸை விளாசும் கிராம மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்: உள்ளூர் மக்களின் பிரச்சனையை முதலில் தீர்த்து வைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணற்றால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதனைக்கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

Lakshmipuram villagers are urging OPS to solve the well issue

இதைத்தொடர்ந்து தனது கிணற்றை கிராம மக்களுக்கு தானமாக வழங்க உள்ளதாக ஓபிஎஸ் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கிணறை தருவதாக கூறி அதனை வேறு நபருக்கு ஓபிஎஸ் விற்பனை செய்துவிட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைக் கண்டித்து லட்சுமிபுரம் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி இன்று போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று மாலை மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்தினர்.

முதலில் உள்ளூர் பிரச்சனையை ஓ.பன்னீர்செல்வம் தீர்க்க வேண்டும் என்றும் பின்னர் சென்னைக்கு போகலாம் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களை அம்போவென விட்டு ஊர் மக்களின் பிரச்சனைக்கு கொடி பிடிக்கிறார் என்றும் சாடியுள்ளார்.

உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் தான் கூறியடி ஊருக்கு பொதுவாக கிணற்றை ஒப்படைக்கவில்லை என்றால், அடுத்ததாக 18 கிராமங்களை கூட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lakshmipuram villagers protest aganist OPS. Villagers wants OPS well. They are urging OPS to solve the villagers issue
Please Wait while comments are loading...