For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல்- லைசன்ஸ் துப்பாக்கிகளை மார்ச் 31க்குள் ஒப்படைக்காவிட்டால் உரிமம் ரத்து

|

சென்னை: உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், தங்களது து்ப்பாக்கிகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 5 ஆம் தேதியிலிருந்து தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. அதன்படி, தேர்தல் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்க முறைகேடாக உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Licensed guns should be surrendered on or before March 31

கடந்த 5 ஆம் தேதி முதல் நேற்று வரை மட்டும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சென்னையில் உரிய அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 41 லட்சம் பணம், 24 கிலோ தங்க நகைகள் சிக்கியது. இதனை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் அரசு கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும் என்பது மரபாகும். அதன்படி, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்," சென்னை மாநகரில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரைப்பட பிரபலங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என 2,750 பேர் அரசு அனுமதியுடன், முறையான உரிமத்துடன் துப்பாக்கியை தங்கள் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதன்படி, இதுவரை 1,183 பேர் தங்கள் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர்.

துப்பாக்கியை ஒப்படைக்காதவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் துப்பாக்கி "லைசென்ஸ்" உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி வங்கிகள், செக்யூரிட்டி நிறுவனங்களில் மட்டும் துப்பாக்கியை பயன்படுத்த சில நிபந்தனைகளுடன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு துப்பாக்கி, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

English summary
Licensed guns should be surrendered to nearer police stations on or before this month 31st. Police says this for election safety. If anyone forgets to submit, their license will be cancelled by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X