தஞ்சாவூர் அருகே பயங்கர விபத்து: லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாப பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சை - பட்டுக்கோட்டை புறவழிச்சாலையான கீழவஸ்தாசாவடி என்ற இடத்தில் லாரி ஒன்று கொண்டிருந்தது. அப்போது திடீரென் அதிவேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த லாரி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அரவிந்த், விஜயகுமார், தனுஸ்ரீ, தட்சிணாமூர்த்தி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். மற்றொருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Lorry- car mishap accident: 5 dead near Tanjore

விபத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரில் உயிரிழந்தவர்கள், தஞ்சையை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A car mishap occurred on the truck near Thanjavur. Five of them died. Police have registered the case and are investigating the case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற