ரஜினியின் கட்சியில்தான் சேர்வேன்.. லைக்கா தலைமை பொறுப்பையே துறந்த தீவிர ரசிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லைக்கா நிறுவன இந்திய கிளை தலைவர் ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்த் கட்சியில் சேர முடிவு எடுத்து இருக்கிறார்.

இலங்கையை சேர்ந்த லைக்கா நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக வைத்து செயல்பட்டு வருகிறது. 23 நாடுகளில் இருக்கும் இந்த நிறுவனம் உலகின் பல நாடுகளில் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

Lyca's India Head resigns form Lyca to join in Rajini's party

இந்தியாவிலும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய கிளை தலைவராக ராஜூ மகாலிங்கம் செயல்பட்டு வந்தார்.

இவர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் 2.0 படத்தை தயாரிக்க இவர் அதிக முயற்சிகள் எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது லைக்கா நிறுவனம் தான் அந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் சேரப்போவதாக ராஜூ மகாலிங்கம் அறிவித்து இருக்கிறார். இதற்காக லைக்கா நிறுவன இந்திய கிளை தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

இவருக்கு ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு ஒன்று கொடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Lyca's India Head Raaju Mahalingam resigns form Lyca to join in Rajini party. Raaju Mahalingam is hardcore Rajini fan. He may get important position in Rajini's new party.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற