நான் மருத்துவ படிப்பு சேரும்போது கருணாநிதி ஆட்சிலேயே இல்லை! - தமிழிசை விளக்கம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் மருத்துவம் படித்த போது கருணாநிதி ஆட்சியில் இல்லை. எம்ஜிஆர் தான் ஆட்சியில் இருந்தார். ஆகையால் உண்மையைத் திரித்துக் கூறக் கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மருத்துவ படிப்பு கருணாநிதி போட்ட பிச்சை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

M.K.Stalin and Tamilisai having war of words between them

இதற்கு பதில் அளித்த தமிழிசை, நான் மருத்துவம் படிக்கும் போது எம்ஜிஆர் தான் ஆட்சியில் இருந்தார். கருணாநிதி ஆட்சியில் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆகையால் ஸ்டாலின் உண்மைகளை திரித்துக் கூறுவதை நிறுத்த வேண்டும்.

மேலும், நான் மருத்துவம் படிக்கும் போது எந்த நுழைவுத் தேர்வும் இல்லை. நேர்முகத் தேர்வு மட்டுமே இருந்தது. மேலும் என் மருத்துவக் கல்லூரி படிப்பின்போது, ஒருபோதும் அரியர்ஸ் வைத்தது இல்லை. வெளிநாடுகளிலும் நான் தகுதியுடன் தான் படித்தேன். திமுக பிரமுகர்கள் 'தமிழ்', 'தமிழ்' என முழக்கமிடுக்கிறார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகள் எத்தனை பேர் தமிழில் படித்துள்ளனர் என கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
M.K.Stalin and Tamilisai having war of words between them. When replying to a comment of Stalin, Tamilisai warned that Stalin should stop saying false information.
Please Wait while comments are loading...