அதிமுக மாஜி எம்எல்ஏவின் 2 மனைவிகளுக்கு சிறை... சொத்துக்குவிப்பு வழக்கில் பரபர தீர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் மனைவியருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையை ஹைகோர்ட் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் 1991- 96 வரையிலான காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் வீ. பன்னீர்செல்வம். இவரது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ. 21லட்சம் மதிப்புடைய சொத்துகளை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.

Madras highcourt confirms the jail term for ex MLA Paneerselvam wives

இந்தப் புகாரில் பன்னீர்செல்வம், அவருடைய மனைவி ஜானகி அம்மாள் மற்றும் துணைவி தனபாக்கியத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றம் 2007ம் ஆண்டில் பன்னீர்செல்வத்திற்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அவரின் 2 மனைவிகளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனிடையே 2012ம் ஆண்டில் பன்னீர்செல்வம் மரணமடைந்து விட்டார்.

இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வத்தின் இரண்டு மனைவிகளின் தண்டனையை உறுதி செய்துள்ளது. இதனால் மாஜி எம்எல்ஏ வீ.பன்னீர்செல்வத்தின் மனைவி ஜானகி அம்மாள் துணைவியார் தனபாக்கியம் 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madrasd highcourt confirms the jail term of Bodi Ex MLA Pannerselvam wives for disproportionate assets case, they appealed to highcourt to escape from the punishment.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற