For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை அருகே இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

சென்னை அருகே வங்கக்கடல் பகுதியில் இந்திய அமெரிக்க ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை தொடங்கினர்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடல் பகுதியில் சென்னையை ஒட்டிய கடற்பரப்பில் இந்திய அமெரிக்க ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டு கடற்பயிற்சி தொடங்கியதன் ஒரு பகுதியாக, அமெரிக்க கடற்படை வீரர்களுடன், இந்திய கடற்படை வீரர்கள் கூடைப்பந்து போட்டி ஒன்றில் பங்கேற்கின்றனர்.

Malabar 2017: India kicks off naval exercise with US, Japan in Bay of Bengal

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கடற்படை வீரர்கள் இணைந்து, வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கூட்டாகக் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

'மலபார்' என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டுப் பயிற்சி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரபிக்கடல் பகுதியில் ஏற்கெனவே பயிற்சி தொடங்கி நடந்து வரும் நிலையில், வங்கக்கடல் பரப்பில் இந்த கூட்டுப் பயிற்சி நேற்று தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி மையத்தில், இன்று, அமெரிக்க கடற்படை வீரர்களும், இந்திய கடற்படை வீரர்களும் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கின்றனர்.

English summary
India kicks off naval Malabar exercise with US, Japan in Bay of Bengal. It is the 21st edition of the Malabar exercise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X