ஆட்சிக்கு எதிராக போராடுறதும், அம்மாவுக்கு எதிரா போராடுறதும் ஒன்னுதான்... ஜெயக்குமார் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக அரசுக்கு எதிராக போராடினால் அது ஜெயலலிதாவிற்கு எதிரானது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சி ஒன்றும் மண்சட்டியில்ல துரைமுருகன் கவிழ்ப்பதற்கு, அதிமுக இமயமலை அதை யாராலும் அசைக்க முடியாது.

Minister Jayakumar hints for unity

அதிமுக அரசுக்கு எதிராக போராடினால் அது ஜெயலலிதாவிற்கு எதிரானது. நாம் ஒற்றுமையாக இருந்து இந்த அரசை காக்கவேண்டும்.
எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் வாய்க்கை நாம் அவர்களுக்குத் தரக்கூடாது என்றார்.

அதிமுக திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது குறித்து பதிலளிக்கையில் திமுக உடன் கூட்டணியெல்லாம் கிடையாது என்றார். நெஞ்சிலே முதுகிலே குத்துகிற சவலால்களை அதிமுக அரசு எதிர்கொள்கிறது

Jayakumar speech Was like a Rap Song - Oneindia Tamil

வரும் ஆண்டுகளிலும் தேசிய கொடியை ஜெயலலிதா அரசுதான் ஏற்றும் என்றார். தமிழக மீனவர்கள் கைது கண்டனத்திற்குரியது. மீனவர்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டி செல்லவில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துவார் என்றும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar indirectly advises o. Paneerselvam that protesting against ADMK government is equal to protest against Jayalalitha.
Please Wait while comments are loading...