காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தலையிடவில்லையா? கும்பகோணத்தில் அமைச்சர் காமராஜ் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தலையிடவில்லையா?

  கும்பகோணம்: தமிழக அரசு காவிரி பிரச்சினையில் தலையிடவில்லை என கூறுவது முற்றிலும் தவறு என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

  கும்பகோணம் அருகே இனாம்கிளியூரில் பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியபோது தெரிவித்ததாவது:

  Minister Kamaraj spoke on the Cauvery issue in Kumbakonam

  காவிரி மேலாண்மை வாரியத்தையும் மேற்பார்வை குழுவையும் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் மூலம் தமிழக அரசு உறுதியாக அமைக்கும். தமிழகத்திற்கு வந்த பிரதமரிடம் தமிழகஅரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

  இப்பிரச்சனையில் தமிழக அரசு செயல்படவில்லை என மற்ற கட்சிகள் கூறுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே மாற்றுகட்சிகள் அவ்வாறு கூறுவதை நிறுத்தி கொள்ளவேண்டும் என டெல்டா பகுதியில் வசிக்கும் மக்களின் ஒருவனாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அமைச்சர் காமராஜ்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamil Nadu Food Minister Kamaraj said that the Tamil Nadu government will ensure that the Cauvery Management Board and the Supervisory Committee will be set up by Supreme Court and Central Government. He also urged the Prime Minister to come to Tamilnadu Cauvery Management Board.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற