பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு... செல்லூராரின் கருத்துக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதவாத சக்திகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார்.

நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் செயல்பாடுகளை ஆதரித்த தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.

மேலும் பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் மத்திய அரசுக்கு பணிந்து போவதாகவும் தமிழக அரசு விமர்சனங்களை சந்தித்தது. தற்போது அதிமுகவில் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வருகின்றனர்.

மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை

மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை

மதுரையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜகவுடன் இணக்கமாக இருந்தது தான் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். ஜெயலலிதா பாணியில் இனி பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும். மதவாத சக்திகளுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்றார்.

முரண்பாடான கருத்து

முரண்பாடான கருத்து

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைபட்டியில் செய்தியாளர்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்தபோது அவர் கூறுகையில் சட்டசபையில் 89 திமுக எம்எல்ஏக்களை சமாளிக்கும் அதிமுகவுக்கு தினகரனை சமாளிப்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது.பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது என்றார். இது முற்றிலும் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு முரண்பாடாகவே உள்ளது.

மேலிருப்பவர் பார்த்துக் கொள்வார்

மேலிருப்பவர் பார்த்துக் கொள்வார்

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்தபோது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய ராஜேந்திர பாலாஜி, இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும். மேலிருக்கும் மோடி அவர்கள் அதை எங்களுக்கு பெற்று தருவார் என்று பகிரங்கமாகவே அவர் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவின் வாக்கு வங்கி

பாஜகவின் வாக்கு வங்கி

ஆர்கே நகர் இடைத்தேர்தல் தொடங்கியபோது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எம்பி மைத்ரேயன், அதிமுகவின் வாக்கு வங்கிகளே போதுமானது. பாஜகவின் வாக்கு வங்கியை பெற்று வெற்றி பெற வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று கூறினார். இதுபோல் அதிமுகவில் பாஜக ஆதரவு, எதிர்ப்பு அலைகள் வீசி வருவது அதன் ஒற்றுமையை கேள்வி எழுப்புவதாகவே பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Rajendra Balaji says ADMK will make alliance with BJP in SriVilliputhur.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற