சென்னையில் மாற்றுத் திறனாளிகள் சலூன்.. திறந்து வைத்தார் மிதாலி ராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்று திறனாளிகள் நடத்தும் சலூனை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தொடங்கிவைத்தார்.

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நெட்சுரல் சலூன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

Mithali Raj inaugurated first disable beauty salon in Chennai

அவருக்கு சலூனில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் கேக் ஊட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். சென்னையில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இதில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள், காதுகேளாதவர்கள் பணிபுரிகின்றனர். மாற்று திறனாளிகள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய உதவும் நோக்கத்திற்காக இந்த சலூன் உருவாக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mithali Raj inaugurated first disable beauty salon in Chennai. Its made for differently abled person.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற