தமிழக அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தாராம் ஸ்டாலின்.. பீதி கிளப்பிய ஆங்கில ஊடகங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் கூவத்தூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்வியை தவறாக புரிந்து கொண்ட ஆங்கில ஊடகங்கள், அவர் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக பிரேக்கிங் நியூஸ் போட்டதால் பரபரப்பு நிலவியது.

சசிகலா தரப்பு குதிரைபேரம் பேசி கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைத்திருந்ததாக ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஸ்டிங் ஆபரேசன் மூலம் தகவல் வெளியிட்டது.

அதிமுக எம்.எல்.ஏ சரவணன் இதுகுறித்த தகவலை வெளியிட்டதாக கூறி, அந்த சேனல் செய்தி ஒளிபரப்பியிருந்தது. இதை சரவணன் மறுத்திருந்தார்.

ஆர்வக் கோளாறு

ஆர்வக் கோளாறு

இந்த சம்பவத்திற்கு பிறகு, தேசிய ஊடகங்கள் கவனம், தமிழக அரசியலுக்கு திரும்பியுள்ளது. இன்று அதில் ஒருபடி மேலேபோய், ஆர்வம், ஆர்வக்கோளாறாக மாறிவிட்டது.

வெளிநடப்பு

வெளிநடப்பு

சட்டசபையில் இன்று, ஸ்டாலின் பேசுகையில், கூவத்தூர் குதிரைபேரம் குறித்த குற்றச்சாட்டு பற்றி சபாநாயகரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை படித்துக்காட்டுமாறு வேண்டுகோள்விடுத்தார். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகரிடம் விளக்கம்

இதுகுறித்து செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்ட டிவிட் ஒன்றில், "திமுகவின் ஸ்டாலின் கூவத்தூர் விவகாரம் குறித்து கிளப்பியுள்ளார், தமிழக சட்டசபை நம்பிக்கை தீர்மானம் குறித்து ஆளுநர் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டுள்ளார்" என ஆங்கிலத்தில் கூறப்பட்டிருந்தது.

தவறான செய்தி

தவறான செய்தி

இதை தவறாக புரிந்துகொண்ட ஆங்கில தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்கள், ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளார் என பிரேக்கிங் செய்திகளை அடித்துவிட ஆரம்பித்தன. இதனால் தமிழ் நிருபர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஒன்றுக்கு இருமுறை அவர்கள் சட்டசபை நிகழ்வுகளை சரிபார்த்துக்கொண்டனர்.

போட்டியால் விபரீதம்

போட்டியால் விபரீதம்

தமிழ் நிருபர்கள் தங்கள் ஆங்கில ஊடக நண்பர்களுக்கு தவறை திருத்துமாறு, தகவல் கொடுத்த பிறகு, ஆங்கில ஊடகங்கள் நடந்ததை உணர்ந்து செய்தி கோணத்தை மாற்றிக்கொண்டு, வெளிநடப்பு என்பதை தெரிவித்தன. செய்தியை முந்திதர வேண்டும் என்பதால் சரியாக விசாரித்து பார்க்காமல் டெல்லியிலும், மும்பையிலும் தலைமையிடத்தை கொண்ட ஆங்கில ஊடகங்கள் பிரேக்கிங் போட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
English medias wrongly put breaking news that said, MK Stalin submit no confidence motion in the Assembly.
Please Wait while comments are loading...