For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெருகும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு... அடுத்த திட்டத்தில் தினகரன்? - வீடியோ

தினகரனுக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருவதால் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: இரண்டு நாட்களாக எம்.எல்.ஏக்கள் தினகரனை அவரது பெசன்ட் நகர் இல்லத்தில் சந்தித்து வருவதால் எடப்படி அனியினர் கலக்கமடைந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தினகரன் 35 நாட்கள் சிறையில் இருந்து வெளிவந்ததும், பல்வேறு பிரச்சனைகள் தமிழக அரசியலில் உருவாகி வருகிறது. பெங்களூரு சிறைக்குச் சென்று சித்தி சசிகலாவைச் சந்தித்து வந்த தினகரன், 60 நாட்கள் பொறுமை காப்பேன் என கூறினார்.

 MLAs support increasing day by day to Dinakaran

ஆனால் புயலைக் கிளப்பும் வகையில் மணி நேரத்துக்கு ஒரு எம்.எல்.ஏ தினகரனை சந்தித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் சூழலில் குழப்பமும், அதிமுக ஆட்சி நிலைப்பது குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, திருத்தணி எம்.எல்.ஏ நரசிம்மன் உள்ளிட்டோர் தினகரனை சந்தித்துள்ளனர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போயஸ் கார்டன் யாரும் கவனிப்பாரற்ற இடமாக மாறிவிட்டது. தினகரனின் பெசன்ட் நகர் வீடு பரபரப்பின் மையமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

English summary
As MLAs support increasing day by day to Dinakaran, opposite party minister like Jayakumar is in fear and turmoil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X