For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி -ராஜபக்சே சந்திப்பு... இலங்கை முயற்சிக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் முயற்சி என்கிறார் தமிழி

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்தது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு இலங்கை அதிபர் ராஜ்பக்சே உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக் குறித்து பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

Modi met Rajapaksa to solve Srilankan Tamil issues : Thamilisai

இலங்கைப் பிரச்சினை...

இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் பிரதமர் மோடி தீவிரமாகவுள்ளார். தேர்தலுக்கு முன்பிருந்தே இது குறித்து அவர் பேசி வருகிறார்.

13வது சட்ட திருத்தம்...

தனது பதவியேற்பு விழாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் 13வது சட்ட திருத்தத்தை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இலங்கையிலிருந்து டெல்லி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

அமெரிக்க சந்திப்பு...

இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, அங்கு ராஜபக்சேவை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு காணும் முயற்சியாகும்.

நிரந்தர தீர்வு...

இதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால் நாம் பேசினால் தான் முடியும்.

பாஜகவின் உறுதி...

தமிழகத்தின் மற்ற கட்சிகளை விட இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏறபட வேண்டுமென்பதில் பாஜக உறுதியாகவுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The BJP state president Thamilisai Soundarrajan has said that the PM Modi's meeting with Rajapaksa was to solve Srilankan Tamil issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X