தொடர் விடுமுறை.. ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையால் ஏடிஎம்.களில் பணம் இல்லா நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று 2வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அதேபோல நாளை ஞாயிறு, நாளை மறுநாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15ம் தேதி சுதந்திர தினம். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் என்பதால், தமிழகத்திலுள்ள அனைத்து வங்கிகளும் மூடியிருக்கும். இதனால் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி இன்று முதல் 4 நாட்களுக்கு பாதிக்கப்படும் என்பதால் ஏடிஎம்களில் அடுத்தடுத்த நாட்களில் பண இருப்பு குறைந்து, நாளை மறுநாள் முதல் பணத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Money may not get available in ATMs

இருப்பினும் இப்போது அனைத்துமே டிஜிட்டல்மயமாகி வருவதால் படித்த, மேல்தட்டு மக்கள் ஏடிஎம் பணப் பிரச்சினையில் தப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Banks will continue to have a 4-day holiday which may lead to lack of money in ATMs.
Please Wait while comments are loading...