பத்திரிகையாளர்கள் உரிமைகளுக்காக மரணிக்கும் வரை போராடியவர் ”எம்.யூ.ஜே.” மோகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரிகையாளர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தாம் மரணிக்கும் வரை தொடர்ந்து போராடியவர் எம்.யூ.ஜே. மோகன்.

சென்னையில் பத்திரிகையாளர்கள் தொடர்பான எந்த் ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அங்கே முதலில் நிற்கக் கூடியவர் எம்யூஜே மோகன். கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை அணி திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தவர் மோகன்.

 MUJ Mohan fight for the welfare of Journalists

தினமலர், தினகரன் பத்திரிகைகளில் முதுநிலை செய்தியாளராக பணிபுரிந்தாலும் 'எம்யூஜே' மோகன் என்றே அனைவராலும் அறியப்பட்டவர். பத்திரிகையாளர்கள் நலன்களுக்கு மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் நேர்மைத் தன்மையை கடைபிடிக்க வலியுறுத்தினார்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதியன்று பத்திரிகையாளர் மன்ற பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்தி தனிநபராக உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியவர் எம்யூஜே மோகன்.

தமிழகத்தின் எந்த மூலையிலும் பத்திரிகையாளர் மீது ஒடுக்குமுறை ஏவிவிடப்பட்டால் அதைக் கண்டிக்கும் முதலாவது குரல் மோகனுடையதுதான். மத்திய அரசின் மஜிதியா ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள செயல்படுத்துதல், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகத்துறையில் உள்ள அனைவரையும் உள்ளடக்கும் வகையில் உழைக்கும் பத்திரிகையாளர் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை முழுமையாக ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பவை எம்யூஜே மோகனின் நிறைவேறாத கோரிக்கைகள்.

பத்திரிகையாளர்கள் தங்களுக்கான ஒரு குரலை திடுமென இழந்துநிற்கிறார்கள்!

மோகன் வீட்டு முகவரி:

215/144, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் அருகில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஆர்ச் அருகில்,

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior Journalist MUJ Mohan who fought for the welfare of Journalists today passed away.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற