கடையநல்லூரில் 10000 பேர் பங்கேற்ற தொழுகை.. மோடி, எடப்பாடி மீது தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்காசி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10,000பேர் கலந்து கொண்டனர். ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்த தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பபட்டது

இதில் காயிதே மில்லத் திடலில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.

Muslims offered Eid prayers in Kadaiyanallur near Nellai

சரியாக 6.30 மணியளவில் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில், தற்போது இந்திய திருநாட்டில் மத வாத அரசு மாட்டியின் பெயரால் அரசியல் செய்து வடமாநிலங்களில் தொடந்து இஸ்லாமியர்களும் தலித்துகளும் அடித்து கொள்ளப்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.

மாடு, ஒட்டகம் போன்றவற்றை வழிபாட்டுக்கு கூட அறுக்கக் கூடாது என்று சட்டம் போட்டு தடுக்கிறது
சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையில் தலையிடுகிறது. மேலும் மாட்டுக்கறி விஷயத்தில் தமிழக எடப்பாடி அரசு வாய் திறக்காமல் கள்ள மவூனம் காப்பது கண்டனத்திற்குறியது என்றார்.

மேலும் தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார். இஸ்லாத்தில் ஜாதிப் பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது, இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது. ஒருவரை வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், குறிச்சி சுலைமான், துராப்ஷா, அஜீஸ், அய்யூப்கான் பாதுஷா , ,அப்துல்காதர், ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் மாவட்டபேச்சாளர் அப்துல் காதரும் ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் சதாம் உசேனும் 8வது தெரு தவ்ஹீத் திடலில் காராஸ் மைதீன் , மக்கா நகர் அல் ஹிதாயா திடலில் அப்துல் அஜீஸ், இக்பால் நகர் தெப்பதிடல் ஆகிய இடங்களில்நடை பெற்ற பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் மாரியப்பன் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் , உதவி ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின்ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Muslims offered Eid prayers in Kadaiyanallur and Thowheed Jamath leader slams Modi and Edappadi government for cow slaughter ban.
Please Wait while comments are loading...