86% பணம் செல்லாது என்று எந்த கோமாளியும் சொல்லமாட்டான் - நாராயணசாமி சுளீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: பெரிய நிறுவன முதலாளிகளுக்கு சலுகை செய்வதற்காக பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பட்டதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக சாடினார்.

Narayanaswamy blasts Modi

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏழைகள் தொழிலாளர்கள், விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர். ரூ.2000 புதிய நோட்டை மாற்ற முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்து 159 பேர் உயிரிழந்தனர்.

86% பணம் செல்லாது என்று எந்த கோமாளியும் திடீரென சொல்லமாட்டான் என்று அவர் தெரிவித்தார். பெரிய நிறுவன முதலாளிகளுக்கு சலுகை செய்வதற்காக பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நாரணயசாமி குற்றம் சாட்டினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry CM Narayanaswamy has blasted PM Narendra Modi for his failed demonetization.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற