சீன புயலால் தமிழகத்திலும் வரலாறு காணாத மழை காத்திருக்கிறது.. பீதி கிளப்பும் நாசா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மிக கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

  சென்னை: சீனாவின் கடந்த சில மாதங்களாக மாறி மாறி புயல் விசுக் கொண்டே இருக்கிறது. தற்போது அங்கு வீசிக்கொண்டிருக்கும் புயலுக்கு 'ஸ்வாலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

  தற்போது சீனாவின் தென் பகுதியில் இருந்து ஜப்பானுக்கு இடம்பெயர்ந்திருக்கும் புயல் தாக்கம் காரணமாக இந்த வருடம் தென் இந்தியாவில் வரலாறு அளவில் மழை பெய்யும் என கூறப்படுகிறது. இந்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பருவமழை தாமதமாக ஆரம்பித்தாலும் மழை அளவு அதிகமாக இருக்கும் என்றும் நாசா சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

  நாசா எச்சரித்த படியே தாமதமாக தொடங்கி தற்போது சென்னையிலும் தமிழ்நாட்டின் மற்ற சில பகுதிகளிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

   தமிழ்நாட்டை தாக்கும் வருட இறுதி பேய்

  தமிழ்நாட்டை தாக்கும் வருட இறுதி பேய்

  ஒவ்வொரு வருடமும் வருட இறுதியில் தமிழ்நாடு ஏதாவது ஒரு வகையில் இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாவது வழக்கம். 2004ல் டிசம்பரில் வந்த சுனாமியில் இருந்து தொடங்கிய பிரச்சனை இப்போது வரை நீடித்து வருகிறது. 2015 ஆண்டும் நவம்பரில் மிகவும் மோசமான அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் சென்ற ஆண்டு டிசம்பரில் மிகவும் மோசமான வகையில் சென்னையில் வர்தா புயல் தாக்கியது. இந்த நிலையில் இந்த வருட இறுதியிலும் இது போன்ற பிரச்சனை நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

   புயலில் தற்போதைய நிலை

  புயலில் தற்போதைய நிலை

  சீனாவில் தொடங்கிய இந்த ஸ்வாலா புயல் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே செல்கிறது. மேலும் இந்த புயல் தற்போது மெதுவாக ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அங்கு மையம் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நகர்வதால் இது இந்தியப் பெருங்கடலில் பெரும் அளவில் மாற்றத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மழை அதிகம் ஆகும் என கூறப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

   தென்னிந்தியாவுக்கு நாசா எச்சரிக்கை

  தென்னிந்தியாவுக்கு நாசா எச்சரிக்கை

  சீனாவின் தென் பகுதியில் வீசி வரும் ஸ்வாலா புயல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பருவமழை தாமதமாக ஆரம்பித்தாலும் மழை அளவு அதிகமாக இருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. நாசா எச்சரித்த படியே தாமதமாக தொடங்கி தற்போது சென்னையிலும் தமிழ்நாட்டின் மற்ற சில பகுதிகளிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

   சென்னைக்கு எச்சரிக்கை

  சென்னைக்கு எச்சரிக்கை

  இந்த நிலையில் சென்னையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. நாசா எச்சரித்தபடியே வங்கக் கடலில் சீனாவின் புயல் காரணமாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது . இதன்காரணமாகவே தற்போது மழை ஆரம்பித்து இருக்கிறது. இந்த தாழ்வு நிலை விரைவில் வலுப்பெற்று புயலாக மாறக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A new storm is forming in the South China Sea and expected to move westwards across the Gulf of Thailand and hit the Japan. NASA says it will create a huge problem in India's rain. It also says that South India is in a red-zoned place. Chennai Weather report also conforms the NASA prediction.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற