For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுவால் சீரழியும் இளைய தலைமுறை... டாஸ்மாக் கடைகள் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - 415 பேர் கைது

Google Oneindia Tamil News

நெல்லை: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 415 பேர் அதிரடியாக கைது செய்யபபட்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகளும் இதனால் சீரழிநது வருகின்றனர். இதுகுறித்து போட்டாக்களும், வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது. சின்ன சிறு சிறுவர்களும் இதை குடிப்பதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. இதனால் பூரண மதுவிலகைகை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு முறறுகை போராட்டம் நட ந்தது.

Nellai: BJP protests in front of tasmac wine shops

நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோயில் டாஸ்மாக் கடை முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு பாஜ நெல்லை மண்டல தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் குருசாமி, கவுன்சிலர் அழகுராஜ், மதுரை உயர் நீதிமன்ற மத்திய அரசு வக்கீல் பாலகிருஷ்ணசாமி, விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கட்டளஜோதி போராட்டத்தை துவங்கி வைத்தார்.

இது போல நெல்லை சந்திப்பு பகுதியில் தச்சை மண்டல தலைவர் செந்தில் தலைமையில் நிர்வாகிகள் முருகதாஸ், வக்கீல் அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டனர். பாளை மார்க்கெட் உள்பட மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 415 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

English summary
In Tirunelveli the police have arrested 415 BJP partymen, who staged a protest in front of tasmac wine shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X