மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி.. நெல்லைப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7000 சதுர அடி பரப்பளவு உள்ள வீர வசுந்தராயர் மண்டபம் பலத்த சேதமடைந்தது.

Nellaiyappar temple banned camphor

மண்டபத்தின் தூண்கள் மற்றும் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. கோவில் வளாகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மற்ற கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nellaiyar temple has been banned for camphor after the fire accident in the Meenakshi Amman temple in Madurai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற