For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவின் கர்ஜனை குரலை மறக்க முடியுமா? ... கலங்கும் நெட்டிசன்ஸ் #Jayalalitha #Jaya

ஜெயலலிதா எனும் மாபெரும் தலைவர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விண்ணுலகத்திற்கு சென்ற முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களால் நான்! மக்களுக்காக நான்!- வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவர் இறப்பால் மீளா துயரத்தில் இருக்கும் தொண்டர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.

    ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு, மரணமடைந்துவிட்டார்.

    தமிழகத்தையே மீளா துயரத்தில் விட்டு சென்ற அந்த தங்கத்தாரகைக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ள இரங்கல்களின் தொகுப்பு இதோ...

    பார்த்து வா மகளே...

    வானம் தலையில் இடித்திட போகுது பாத்து வா மகளே !!!
    நீ வளர்ந்த உயரம் அப்படி பட்டது பார்த்து வா மகளே !!! தெய்வ திருமகளே, தமிழ் நாட்டின் குளவிளக்கே !!!!

    ஜெ ஜெயலலிதா எனும் நான்

    இறந்தும் இறவாப் புகழ் பெற்று
    இறைவனை ஆளும்
    ஜெ ஜெயலலலிதா எனும் நான்
    என்ற மந்திரம்.

    கவிதை பிறக்கும் புன்சிரிப்பு

    கருணை நிறைந்த முகம்....

    கவிதை பிறக்கும் புன்சிரிப்பு...

    பகை எவர்க்கும் பணியாத தலை...

    தமிழுக்கு தன்னைக்கொடுத்து,

    தமிழ்நாட்டிற்க்கு காவிரி தந்து தலைநிமிரச்செய்த தாயே...

    உன் நெஞ்சுரத்திற்க்கு எங்களது வாழ்க்கையும் வார்த்தையும் சமர்ப்பணம்

    மறக்க முடியுமா?

    கர்ஜிக்கும் சிங்க குரல்.தைரியம், அறிவு. செய்த நல் திட்டங்கள் எத்தனையோ மறக்க முடியுமா..

    அத்தகைய ஆளுமை எங்கே?

    காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்த நிலை மாற்றி தலைநிமிர்ந்து நடக்க வழிவகுத்து கொடுத்தீர்கள். இனி அத்தகைய ஆளுமையை எங்கு சென்று தேடுவேன்?

    கண்ணீர் வராத கண்கள் இல்லை

    போன வருடம் 'ஜெ' இறந்த செய்தி கேள்விபட்டு கண்ணீர் வராத கண்களே இல்லை எனலாம்..!!!

    English summary
    Today is Jayalalitha's first anniversary day. Netisans shared their condolences for Jayalalitha's first death anniversary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X