For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் நாஞ்சில் சம்பத், நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட 11 செய்திதொடர்பாளர்கள் நியமனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக.,வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பலரது கட்சி பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. மாஜி அமைச்சர் பலரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. நாஞ்சில் சம்பத், நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோருக்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பு புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

Nirmala Periyasamy, Nanjil Sampath appoints ADMK Press persons

பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன்,ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, நாஞ்சில் சம்பத், கோ. சமரசம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், வைகை செல்வன், சி.ஆர்.சரஸ்வதி, க.பாண்டியராஜன், நிர்மலா பெரியசாமி ஆகிய 11 பேர் கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதோடு, எதிர்கட்சியினரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பார்கள்.

நாஞ்சித் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, பண்ருட்டி ராமச்சந்திரன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கடந்த காலங்களில் ஊடக விவாதங்களில் அதிகம் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் டிவியில் அளித்த பேட்டி காரணமாக பதவியை பறிகொடுத்தார். தற்போது அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வைகைச் செல்வன், சி.ஆர். சரஸ்வதி என அதிமுகவில் மொத்தம் 11 பேரை செய்தி தொடர்பாளர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் ஊடகங்களில் எதிர்கட்சியினரை சமாளித்த மிகப்பெரிய படையை தயார் செய்துள்ளார்.

English summary
Jayalalitha appointed 11 new press persons including Nanjil Sampath and Nirmala Periyasamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X