For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சின்னு இருந்தா பொதுச்செயலாளர் இருக்கனுமே.. கமலின் மக்கள் நீதி மய்யத்தில்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படவில்லை

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    திராவிட அரசியல் செய்வதாக அறிவித்த கமல் கட்சி பெயரில் திராவிடத்தை காணவில்லை ஏன்? | Oneindia Tamil

    சென்னை: இந்திய அரசியல் கட்சிகளின் பொது அம்சமான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என எதுவுமே இல்லை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில்.. பொதுச்செயலாளர் பதவி கூட இல்லாமல் ஒரு கட்சியை நடத்த முடியுமா? என்கிற விவாதமும் எழுந்துள்ளது.

    தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி பதிவு செய்வதற்கான விதிகளும் இருக்கின்றன.

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கட்சிகளில் பொதுவாக தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகள் இருக்கின்றன. இதனைத்தான் திராவிட கட்சிகளும் பின்பற்றுகின்றன.

    சசியால் பஞ்சாயத்து

    சசியால் பஞ்சாயத்து

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என பஞ்சாயத்து ஏற்பட்டது. சசிகலாவை நியமன பொதுச்செயலராக்க அது செல்லாது என இன்னொரு பஞ்சாயத்து.

    ஒருங்கிணைப்பாளர்கள்

    ஒருங்கிணைப்பாளர்கள்

    இப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்; ஒருங்கிணைப்பாளர்- துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியில் ஏற்கனவே தலைமை ஒருங்கிணைப்பாளர் என்கிற பொறுப்பு உள்ளது.

    உயர்நிலைக் குழு

    உயர்நிலைக் குழு

    கமல்ஹாசன் கட்சியில் இன்னமும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொfடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்த போது, ஒரு கட்சி தொடங்கப்படும் போது அதன் பை லா என்பது எப்படியான பதவிதான் தங்களது கட்சியில் உயர்ந்தது என முடிவெடுக்கிறது என்கிற அம்சம் இடம் பெற்றிருக்கும். அதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும்.

    பொதுச்செயலர் பதவி கட்டாயம் இல்லையாம்

    பொதுச்செயலர் பதவி கட்டாயம் இல்லையாம்

    ஆகையால் கட்சிக்கு பொதுச்செயலாளர் பதவி கட்டாயம் என்பதெல்லாம் இல்லை என்கின்றனர். ஆண்டவர் எல்லாவற்றிலும் வித்தியாசம்தான்!

    English summary
    Kamal Haasan's Makkal Neethi Maiyam party has not created as General Secretary Post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X