For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது கண்டக்டர் இல்லா பேருந்து சேவையா? அப்போ யாரு டிக்கெட் கொடுப்பா?

தமிழக அரசு பேருந்துகளில் நடத்துநர் இல்லா சேவையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு பேருந்துகளில் நடத்துனர்களை நீக்க முடிவு- வீடியோ

    கோவை: தமிழக அரசு பேருந்துகளில் நடத்துநர் இல்லா சேவையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நிதிச்சுமையில் தவித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கண்டக்டர் இல்லா பேருந்து

    கண்டக்டர் இல்லா பேருந்து

    அதன்படி தமிழக அரசு பேருந்துகளில் நடத்துனர் இல்லா பேருந்து சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கண்டக்டர் இல்லா பேருந்து சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    பாயிண்ட் டூ பாயிண்ட்

    பாயிண்ட் டூ பாயிண்ட்

    முதற்கட்டமாக கோவை - சேலம் இடையே இயக்கப்படும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளில் இந்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பேருந்துகள் புறப்படும் இடங்களிலேயே டிக்கெட் வழங்கப்படுவதால் நடத்துநர் இல்லாமல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை, கும்பகோணம், சேலம்

    மதுரை, கும்பகோணம், சேலம்

    இதைத்தொடர்ந்து மதுரை, கும்பகோணம், சேலம் கோட்டங்களில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இடையில் எங்கும் நிற்காத பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளில் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருச்சி,நாகர்கோவில்

    சென்னை, திருச்சி,நாகர்கோவில்

    இந்த சேவை சென்னை - வேலூர், சென்னை - திருவண்ணாமலை, சேலம் - ஓசூர், மதுரை - நெல்லை, தென்காசி - நெல்லை, மதுரை - திருச்சி, திருச்சி - காரைக்குடி, நாகர்கோவில்- நெல்லை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது தமிழகத்தில்

    தற்போது தமிழகத்தில்

    இதற்கு முன் இந்த திட்டம் ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகத்தால் செயல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    English summary
    The Tamil Nadu government has decided to provide the non-conductor service to Tamil Nadu government bus. This service has been in operation since the first time between Point-to-Point buses operated between Coimbatore and Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X