'நுபுர் சர்மா’.. உலகப் போரே வரப் போகுது..! எல்லாத்துக்குமே பாஜக தான் காரணம்! கே.எஸ்.அழகிரி ஆவேசம்!
செங்கல்பட்டு : நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அடுத்த உலக போர் பாரதிய ஜனதா கட்சியால் தான் உருவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
Recommended Video
நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தேசியக் கருத்துக்கள் உலக அளவில் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் குவைத் கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு உலக அளவில் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இதையடுத்து நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் உலகளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கே.எஸ். அழகிரி பேட்டி
இந்நிலையில் அடுத்த உலக போர் பாரதிய ஜனதா கட்சியால் தான் உருவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் உதய்பூர் காங்கிரஸ் கொள்கைப் பிரகடனம் பயிற்சி முகாம் தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் தமிழக மேலிட பொருப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி துவக்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்கி பேசினர்.

கடும் கண்டனம்
இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, மற்றும் சுதர்சன நாச்சியப்பன், விஜயதாரினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் அழகிரி கூறுகையில்," காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் சிறப்பு சிந்தனை அமர்வு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது அதே போன்று இன்று மாநிலத்தில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாஜக துரோகம்
மேகதாது ஆணை விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து விட்டார்கள் , கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டார்கள் , காவிரி ஆறு எந்த எந்த மாநிலத்தில் ஓடுகிறதோ அந்த மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்து விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்பாட்டம் நடத்த தீர்மானம் எடுத்துள்ளோம்.

உலகப் போருக்கு வாய்ப்பு
பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைகாட்சி விவாதத்தின் போது ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்கு முல்லா இருக்கிறார், கிறிஸ்தவர்களை பற்றி பேசுவதற்கு பிஷப் இருக்கிறார், பாரதிய ஜனதா கட்சி அவர்களை பற்றி பேச வேண்டிய தேவையில்லை. இவர்களால் தான் உலக போர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்தார்.
-
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications