For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா குறித்து பேசும்போது கண்கலங்கிய ஓபிஎஸ்!

ஜெயலலிதா குறித்து பேசியபோது ஓ.பன்னீர் செல்வம் கண்கலங்கினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ குறித்து பேசியபோது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அறியாமல் கண் கலங்கி விட்டார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஆளும் கட்சியான அதிமுக படு தோல்வி அடைந்தது. ஆனால் சுயேச்சை வேட்பாளர் தினகரன் பெருவாரியாக வெற்றி பெற்றார்.

ஆர்கே நகர் தோல்வி குறித்தும், தினகரன் அணிக்கு தாவுவதை தடுப்பது குறித்து இன்று கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் டிடிவி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேரை நீக்கிவிட்டு செய்தியாளர்களை முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்தனர்.

மாயதோற்றம்

மாயதோற்றம்

அப்போது ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், நான் டிடிவி தினகரனை விட 18 ஆண்டுகள் சீனியர். தற்போது மாயதோற்றத்தை உண்டு செய்து அவர்கள் வெற்றி பெற்று விட்டனர்.

மக்கள் சந்தேகம்

மக்கள் சந்தேகம்

வாக்காளர்களுக்கு ரூ.10000 கொடுப்பதாக பொய்யான வாக்குறுதியை தினகரன் தரப்பு கொடுத்துவிட்டு தற்போது கொடுப்பார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்தில் மக்கள் உள்ளனர்.

அமைச்சர்கள் பார்க்கவில்லை

அமைச்சர்கள் பார்க்கவில்லை

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது யாருக்கும் அனுமதியில்லை. அவருக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதால் பார்க்க அனுமதிக்கவில்லை. அதனால் அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை.

செங்கல்லை கூட உருவ முடியாது

செங்கல்லை கூட உருவ முடியாது

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை விசாரணை ஆணையத்தில் கொடுக்க வேண்டியதுதானே. அதிமுகவில் பிளவுகள் ஏதும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். அதிமுகவில் இருந்து ஒரு செங்கல்லையும் யாராலும் உருவ முடியாது என்றார்.

உருக்கம்

உருக்கம்

ஜெயலலிதா குறித்து பேசியபோது ஓபிஎஸ் தன்னை அறியாமல் கண் கலங்கினார். இது பார்ப்பவர்களை உருக்க வைத்தது. ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டபோதும் கூட இவர் சோகமே உருவாய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Deputy CM Panneer Selvam shed his tears while talking about Jayalalitha's treatment video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X